விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக இருந்த ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக நாதா நேற்று முன்தினம்பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 சப்-இன்ஸ்பெக்டர்கள், 37 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை மறு உத்தரவு வரும்வரை செயல்படுத்த வேண்டாம் என வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, “கடந்த 2, 3 மாதங்களுக்கு முன்புஅதாவது தேர்தலுக்கு முன்பே பணிமாறுதல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு பணி மாறுதல் வழங்காமல், உயர் அதிகாரிகளின் சிபாரிசு அடிப்படையில் 46 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது குறித்து டிஐஜி பாண்டியன், எஸ்பி நாதா ஆகியோருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. எனவேதற்போது வழங்கப்பட்ட இடமாற்றம் உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என வாய்மொழியாகஉத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் மதுபானக்கடைகள் திறக்கப்பட் டுள்ளதால் விழுப்புரம் மாவட்டம் வழியாக தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் இக்கடத்தலை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago