தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகை எதுவும் இல்லாமல் விவசாய பயன்பாட்டுக்காக டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகளை வழங்கும் திட்டத்தை டிராக்டர்ஸ் அன்ட் ஃபார்ம் எக்யுப்மென்ட்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் வரும் ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வரை செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் 18004200100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.
விவசாயிகள் ஆண்ட்ராய்டு செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மைத் துறையின் களப்பணியாளர் களையோ, வட்டார, மாவட்ட அலுவலர் களையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அலுவலக நேரம் அல்லாத நேரங்களில் அழைக்கும் விவசாயிகளின் தொடர்பு எண்கள் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு, பணியாளர் வந்த பின்னர் விவசாயிகளை தொடர்புகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago