திருவண்ணாமலை மாவட்டத்தில் - குழந்தை திருமணத்தை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை : ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக் கப்படும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. குழந்தை திருமணம் செய்வதால் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத் தால் கருச்சிதைவு ஏற்படவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும், தாய், சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

படிக்கும் பருவத்தில் திரு மணம் நடைபெறுவதால் கல்வி அறிவு தடைப்பட்டு தன்னம் பிக்கை, பொது அறிவு குறைந்து போகிறது. பாலியல் ரீதியான பிரச்சினைகள், கணவன் மனைவிஇடையே குடும்ப பிரச்சினை ஏற் பட்டு தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகிறது. கணவன் மனைவி இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் நிறை வடையாத நிலையில் நடை பெறும் குழந்தை திருமணம் குற்றமாகும். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது, இரண்டும் விதிக்கப்படும். 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞரும் குற்றவாளியாவார். அதேபோல் 21 வயது நிறை வடையாத ஆண் மகனை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளியாவார். குழந்தை திருமணத்தை நடத்தியவர், நடத்துவதற்கு தூண்டியவர் என அனைவரும் குற்றவாளிகள்.

திருமண பத்திரிகை அச்சடிக் கும் அச்சக உரிமையாளர்கள், மணமக்களின் வயது சான்றை சரிபார்த்த பிறகு அச்சடித்துக் கொடுக்க வேண்டும். இதேபோல்திருமண மண்டப உரிமையாளரும் பெண் மற்றும் ஆண் வயதை உறுதி செய்த பிறகே, திருமணத்தை நடத்த அனுமதிக்க வேண்டும். மந்திரம் ஒதுபவரும் உறுதி செய்ய வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதாக முன்கூட்டியே தெரியவந்தால், 1098 என்ற கட்டணம் இல்லாத எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்