மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுக ளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாற்றுத் திறனாளிகள் நலசங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில், ‘‘வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுமார் 21 ஆயிரம் பேர் உள்ளனர்.
அனைவருக்கும் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடக்க முடியாத மாற்றுத்திறனா ளிகள், மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த பெருந்தொற் றில் இருந்து மாற்றுத்திறனா ளிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago