விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக நாதா நேற்றுபொறுப்பேற்றார்.
விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 5-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை எஸ்பியாக இருந்த நாதா விழுப்புரம் எஸ்பியாக மாற்றப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தின் 21-வது எஸ்பியாக நாதாநேற்று பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா தொற்றை கட்டுப் படுத்த சுகாதாரம், உள்ளாட்சி , வருவாய்த் துறையினருடன் காவல் துறை இணைந்து செயல்படும். ரவுடிசம் ஒழிக்கப்படும். சட்டம்சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை கட்டுப்படுத்தப்படும். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கில் கள்ளச்சாராயம், மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத செயல்களுக்கு துணைப்போகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 9498111103 என்ற எண்ணுக்கு யார் வேண்டுமானாலும் எந்த தகவலும் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago