சுகாதாரத் துறையின் திடீர் உத்தரவால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இறந்தோரின் உடல்கள் தேக்கமடைந்தன. மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக் கையால் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் கரோனா தொற்று, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கார ணங்களால் 15 முதல் 20 பேர் வரை இறக்கின்றனர். கரோனா தொற்றால் (பாசிடிவ்) இறந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் ஒப்புதலோடு உடல்கள் ஒப்படைக்கப்படும்.
மேலும் சுகாதார ஆய்வாளரே உடல்களை எடுத்துச்செல்ல ‘கால் சென்டரில்’ அரசு அமரர் ஊர்தியைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் மூச்சுத்திணறலால் (நெக ட்டிவ்) இறந்தால் நேரடியாக உறவினர்களிடமே இறந்தோரின் உடல்கள் ஒப்படைக்கப்படும். மேலும் உறவினர்களே அமரர் ஊர்தியைப் பதிவு செய்யலாம்.
இந்நிலையில், மூச்சுத் திணற லால் இறந்தாலும் சுகாதார ஆய் வாளர் ஒப்புதலோடு உடல்களை ஒப்படைக்க வேண்டுமென அரசு திடீரென உத்தரவிட்டது.
கரோனா தொற்றால் தினமும் ஓரிருவர் மட்டுமே இறப்பதால் சுகாதார ஆய்வாளரைத் தொடர்பு கொள்வதில் சிரமமில்லை. ஆனால், மூச்சுத்திணறலால் தின மும் 15 முதல் 20 பேர் வரை இறக்கின்றனர்.
நேற்று காலை மட்டும் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் 5 பேர் இறந்தனர். இறந்தோரின் உறவினர்கள் சுகாதார ஆய்வாளர்களைத் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், உடல்களை எடுத்துச்செல்ல முடியாமல் பல மணி நேரம் மருத்துவமனையிலேயே காத்திருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டிக்கு புகார் தெரிவித்ததன் பேரில் அவர் துரிதமாகச் செயல்பட்டு உட னடியாக சிவகங்கை அரசு மருத் துவமனையில் சுகாதார ஆய் வாளர் ஒருவரை ஒருங்கிணைப் பாளராக நியமித்தார்.
தொடர்ந்து ஒருங்கிணைப் பாளரே, சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு இறந்தோரின் உடல் களை அனுப்பி வைக்க உதவி னார். மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago