புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஆதிதிராவிடர் தெருவில் சிறுமின்விசைத்தொட்டி கடந்த ஓராண்டாக செயல்படாததால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்து, அப்பகுதியினர் கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago