தி.மலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கிணற்று பாசனம், ஆழ்துளைக் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படு கிறது. அதேபோல், வானம் பார்த்த பூமியாகவும் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால், மழையை எதிர்நோக்கி விவசாயிகள் உள்ளனர்.
இதையொட்டி, மழை வேண்டி பல கிராமங்களில் விவசாயிகள் இணைந்து நூதனவழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, ஆரணி அடுத்த ஆதனூர் கிராம ஏரியில் உள்ள செல்லியம்மன் கோயிலில் நேற்றுசிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, அம்மனுக்கு அசைவ உணவை படையிலிட்டு கிராம மக்கள் வழிபட்டனர். இதை யடுத்து மூதாட்டிகள் ஒன்றி ணைந்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். பின்னர், செல்லியம்மனுக்கு படையிலடப்பட்ட அசைவ உணவு, கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago