தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் காய்கறி, பலசரக்கு மொத்த வியாபாரம் நடைபெற்ற மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததுடன் சமூக இடை வெளியை பெரும்பாலானவர்கள் பின்பற்றவில்லை.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், தொற்று பாதிப்பு குறைவாகஇருக்கும் 27 மாவட்டங்களில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நேற்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. காய்கறி, பழக் கடைகள், மீன், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பைத் தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் அனைத்து காய்கறி மற்றும் பழக்கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. வழக்கத்தைவிட பொதுமக்கள் நடமாட்டம் நேற்று அதிகமாக இருந்ததால் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டதுடன் சமூக இடை வெளியை கடைபிடிக்காதவர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக் கும் அபராதம் விதித்தனர்.
வேலூர் மாங்காய் மண்டி அருகே மொத்த விற்பனை காய்கறி கடைகள் மட்டுமே இயங்கி வரு கின்றன. நேற்று காலை வழக்கத்தை விட அதிக அளவிலான கூட்டம் இருந்தது. நடமாடும் காய்கறி கடைகளுக்கு மட்டும் இதுவரை அனுமதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பால் காய்கறி கடைகள் திறக்க வசதியாக காய்கறி வாங்க கடைகளின் உரிமையாளர்கள் அதிகம் பேர் திரண்டனர். ஊரடங்கு தளர்வில் முக்கியமாக 3 வாரங்களுக்குப் பிறகு இறைச்சி, மீன் விற்பனை கடைகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டன. கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர் நகர பஜார் வீதிகளில் அனைத்து காய்கறி கடைகள் மளிகை கடைகள் திறக் கப்பட்டன. பொதுமக்கள் அந்த பகுதி கடைகளைத்தவிர பிற பகுதி களுக்குச் செல்ல தடை விதிக்கப் பட்டது. கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் பெரும்பா லான இடங்களில் கரோனா விதி களை கடைபிடிக்காமல் இருந்தனர். ரோந்து காவலர்கள் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago