கிராம ஊராட்சிகளில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறினார்.
கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், சித்த மருத்துவ கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று கரோனா தொற்று சளி, இருமல், காய்ச்சல் குறித்து விசாரித்து பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தன்னார்வலர்களுக்கு வேண்டிய உதவிகளை ஒன்றியக் குழு தலைவர்கள் செய்ய வேண்டும். இந்த பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளித்து அவர்களையும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு வேண்டிய முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி பகுதிகளில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அனை வரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தொற்று முழுமையாகக் குறையும் வரை வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி, கரோனா நல மையம் பராமரிப்பு, கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்தல் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்தி தொற்றை குறைக்க ஒன்றியக் குழு தலைவர் கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத் திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago