தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வருக்கு மனு அனுப் பியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன் முதல்வருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பது:
கடலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை அரசு தீர்மானித்த தொகையை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வரும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தில் நோயாளிகளை சேர்க்க மறுக்கின்றனர். பண மிருந்தால் மட்டும் மருத்துவமனை சேர்க்கை என்ற நிலை உள்ளது.
தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற தகுதியான நபர்களுக்கு மருத்துவமனை ரசீது அடிப்படையில் காப்பீடு திட்டத்தில் பயனடைய தமிழக அரசு ஏற்பாடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago