கட்டளை கட்டுப்பாட்டு அறை மூலம் 95% அழைப்புகளுக்கு தீர்வு : கரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா கட்டளை கட்டுப்பாட்டு அறை மூலம் இதுவரை 95 சதவீதத் துக்கும் மேற்பட்ட அழைப்புகளின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என கரோனா தடுப்பு பணிகள் ஒருங்கி ணைப்புக் குழுத் தலைவர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தரேஸ் அஹமது பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவசர சிகிச்சை பிரிவு, புதிதாக ஏற்படுத்தப்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திர கொள்கலன், மருத்துவ மனையில் மருந்தக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மருந்து பொருட்கள் இருப்பு மற்றும் அது விநியோகம் செய்யப்படும் விதம் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் தரேஸ் அஹமது கூறியது:

கரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து பணி களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக முதல்வர் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப் பாட்டு அறை (வார் ரூம்) மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை கட்டளை கட்டுப்பாட்டு மையத்துக்கு 60,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட் டுள்ளன. இதில், 36,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் படுக்கை வசதிகள் குறித்தும், 1,300-க்கும் மேற்பட்ட அழைப்புகள் தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் கோரி யும் வந்துள்ளன. கட்டளை கட்டுப்பாட்டு அறை மூலம் பெறப்பட்ட 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் நாள்தோறும் 40 முதல் 60 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 மடங்கு கூடுதலாக 500 முதல் 600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் துரித நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறை சீர்படுத் தப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக் கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆரம்பகாலத்தில் பொதுமக்களிடம் ஒருவித தயக்க நிலை இருந்தது. ஆனால், தற் போது கிராமப்புறங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து அதிக ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்கின்றனர் என்றார்.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் ப. வெங்கட பிரியா முன்னிலையில், அரசு அலுவலர்கள் மற்றும் தனி யார் மருத்துவமனை நிர்வாகி களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந் திரன், மாவட்ட வருவாய் அலுவ லர் (தேசிய சுகாதார இயக்கம்) அழகுராணி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் திருமால், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதா ராணி, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் என்.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்