பேச்சு, பாடல், கவிதை, கட்டுரை, ஓவியம், குறும்படம் - சுற்றுச்சூழல் தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

தென்காசி, திருநெல்வேலி, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தினப் போட்டிகள் நடைபெற உள்ளன. ‘சுற்றுச்சூழல் காப்போம் சுகம் பெறுவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 3 நிமிடத்துக்குள் பேசி வீடியோ பதிவு செய்து 9943935549 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும்.

‘வளமான பூமியை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல் போட்டி பொது பிரிவினருக்கானது. இதில், சொந்த குரலில் 4 நிமிடத்துக்குள் பாடி வீடியோ பதிவு செய்து 9486585490 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்ப வேண்டும். பொது பிரிவினருக்கு ‘புவியின் வாழ் வாதாரங்களை மீளப்பெறுதல்’ என்ற தலைப்பில் கார்ட்டூன் போட்டி நடைபெறுகிறது. ஒரு பக்கம் மட்டும் ஏ4 அளவில் கார்ட்டூன் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கான ‘பருவநிலை மாற்றமும் தீர்வும்’ என்ற தலைப்பு கொண்ட ஓவியப் போட்டிக்கு ஏ4 அளவு தாளில் ஓவியம் வரைந்து அனுப்ப வேண்டும்.

‘சூடேறும் பூமி குற்றவாளி யார்?’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடைபெறுகிறது. கவிதை 2 பக்கம் இருக்க வேண்டும்.

பொது பிரிவில் குறும்பட போட்டி ‘ பூமி’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 5 நிமிடத்துக்குள் ஓடக்கூடிய வகையில் சிடி அல்லது டிவிடியில் பதிவு செய்து அனுப்ப வேண்டும். பொது பிரிவில் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எனது பங்கு’ என்ற தலைப்பில் தன் வீட்டில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக செய்துள்ளதை பதிவு செய்து 9865263334 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும். பொதுப் பிரிவினர் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 5 விழிப்புணர்வு வாசகம் எழுதி அனுப்பலாம்.

போட்டிகளில் பங்குபெரும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பிடம் பெறும் வெளி மாவட்டத்தை சேர்ந்தோருக்கு அவர்களது முகவரிக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும். ஒருவர் ஒரு போட்டியில் மட்டும் பங்கு பெறலாம். கண்டிப்பாக தங்களது சுய படைப்புகளாக இருக்க வேண்டும். படைப்புகளை வருகிற 20-ம் தேதிக்குள் ‘ஜி.எஸ்.விஜயலட்சுமி, பசுமைத்தாயகம், 50. மின் நகர், குற்றாலம் - 627802, தென்காசி மாவட்டம்’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 9361070077 என்ற வாட்ஸ் அப் எண், gsv.spkces@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்