காட்பாடியில் அதிகபட்சமாக : 57.2 மி.மீ., மழை அளவு பதிவு :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்பாடியில் 57.2 மி.மீ., மழை பதிவானது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் நேற்று முன்தினம் மாலை பரவலான கன மழை பெய்தது. வெப்பச்சலனத்தின் காரணமாக பெய்த திடீர் மழையால் கோடை உழவு செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காட்பாடியில் 57.2 மி.மீ மழை பதிவானது. குடியாத்தத்தில் 7.6, மேல் ஆலத்தூரில் 7.4, பொன்னையில் 3.2, வேலூரில் 32.3, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 25.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்க அணையான மோர்தானாவில் 11.40 மீட்டர் உயரத்துடன் 258.360 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 16 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆலங்காயத்தில் 11, ஆம்பூரில் 8, நாட்றாம்பள்ளியில் 4, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 4.5, வாணியம்பாடியில் 9 மி.மீ மழை பதிவாகியுள்ளன. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோளிங்கரில் 23 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆற்காட்டில் 17, வாலாஜாவில் 1, அம்மூரில் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

ஜமுனாமரத்தூரில் 28 மி.மீ., மழை

தி.மலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, சராசரியாக 8.67 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஜமுனாமரத்தூர் பகுதியில் 28 மி.மீ., மழை பெய்துள்ளது.

மேலும், ஆரணி பகுதியில் 14, செங்கம் 6.4, போளூர் 14.6, திருவண்ணாமலை 12, தண்டராம்பட்டு 3, கலசப்பாக்கம் 8, சேத்துப்பட்டு 3.6, கீழ்பென்னாத்தூர் 14.4 மி.மீ., மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE