வேலூர் அடுத்த புரம் நாராயணி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர் கருவிகளின் பயன்பாட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
வேலூர் அடுத்த புரம் நாராயணி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது. கரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக, கூடுத லாக 15 படுக்கைகளும் தலா ரூ.14 லட்சம் மதிப்பிலான 15 வென்டி லேட்டர் கருவிகள் மற்றும்உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், மருத்துவமனை கண்காணிப்பாளர் கீதா இனியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி கூறும்போது, ‘‘கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகளுடன் கூடிய 35 படுக்கைகள் உள்ளன. அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் அறிவித்தபடி முதல்வரின் காப்பீடு திட்டம் இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 100 பேர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.
திருவலம் பகுதியைச் சேர்ந்த 100 வயதுள்ள நடேசன் என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், தொற்றில் இருந்து முழுமை யாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago