தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்று பரவல் கடந்த 2 மாதங்களாக மிக தீவிரமாக உள்ளது. கரோனா தொற்றால் நுரையீரலில் பாதிப்பு அதிகரித்து மூச்சுத் திணறலுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற் றின் 2-வது அலையின் தாக்கத்தின் தொடர்ச்சியாக ‘கருப்பு பூஞ்சை’ நோயும் பரவத் தொடங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அனைவரும் சென்னை மற்றும் வேலூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் பரவி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து தி.மலை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு யாரும் சிகிச்சை பெறவில்லை.
இந்நிலையில், சென்னை மற்றும் வேலூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 11 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு, திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள மருத் துவமனைகளில் சிகிச்சைஅளிக்கவில்லை. அதேபோல் பரிந் துரைக்கவும் இல்லை. கருப்பு பூஞ்சை நோய்க்கு பாதிக்கப் பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவ ஆய்வு பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago