ஊரடங்கால் வருமானம் இல்லாத - 73 குடும்பங்களுக்கு காய்கறி, மளிகை தொகுப்பு :

By செய்திப்பிரிவு

ஊரடங்கால் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட 73 குடுகுடுப்பைக்காரர்கள் குடும்பத் தினர்களுக்கு காவல் துறையினர் மளிகை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகேயுள்ள புளியங்கண்ணு கிராமத்தில் 73 குடுகுடுப்பைக்காரர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் இருப்பதாக சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து, தன்னார்வலர்கள் உதவியுடன் காய்கறி, மளிகை தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 10 கிலோ அரிசி, அரை கிலோ துவரம் பருப்பு, அரை லிட்டர் எண்ணெய், 200 கிராம் மிளகாய் தூள், 50 கிராம் சாம்பார் பவுடர், அரை கிலோ ரவை, உப்பு ஒரு பாக்கெட் மற்றும் 2 கிலோ வெங்காயம் மற்றும் தக்காளி, ஒரு கிலோ உருளைக்கிழங்கு, ஒன்றரை கிலோ கோஸ் உள்ளிட்ட காய்கறி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 73 குடும்பங்களுக்கு காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா, உதவி ஆய்வாளர் சிதம்பரம் உள்ளிட்டோர் நேற்று வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்