ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் கடந்த மாதம் இறுதியில் தளர்வில்லாத ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த கால கட்டத்தில் கரோனா பரவல் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்ததால் வேலூர்,தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத் தூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட் டுள்ளது. அதன்படி, தளர்வுகளுடன்கூடிய புதிய ஊரடங்கு கட்டுப்பாடு கள் இன்று காலை முதல் வரும் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, பழங்கள், பூக்கள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர்சந்தைகள், அனைத்து வகையான சந்தைகள் செயல்பட அனுமதி யில்லை என்பதுடன் வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் 50 சதவீதம் பணியாளர்களுடன் நிலை யான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம். மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்கு பவர், தச்சர் போன்ற சுய தொழில்செய்பவர்கள் இ-பதிவுடன் பணி புரிய அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. அதேபோல், வாகன பழுது நீக்கும் மையங்கள் செயல்படலாம் என்றும் உணவகங்கள், பேக்கரி கள் ஏற்கெனவே உள்ள நேரத்தை பின்பற்றி பார்சல் சேவை மட்டும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் இ-பதிவு இல்லாமல் செல்ல அனுமதி அளித்துள்ள நிலையில் பிற மாவட்டங்களுக்கு செல்லும்போது இ-பதிவு கட்டாயம் பெற வேண்டும். அரசு மற்றும் அத்தியாவசிய தொழில் நிறுவன ஊழியர்கள் அடையாள அட்டையை பயன் படுத்தி பயணிக்கலாம். உயிரிழந்த நபரின் உடல்களை 5 பேருக்கு மிகாமல் உரிய கரோனா பாது காப்பு விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் ஏற்படும் கரோனா மற்றும் கரோனா அல்லாத சந்தேகத்துக்குரிய பிற நோய் தொடர்பான காரணங்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வா கங்கள் மூலமாகவே அடக்கம் செய் யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறுபவர் கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 51-60 வரை யிலான பிரிவுகளின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் ஊரீசு கல்லூரி வளாகத்தில் இன்று (7-ம் தேதி) காலை முதல் மொத்த வியாபாரத்தில் மட்டுமே பூக்கள் விற்பனை நடைபெறும்’’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம். கடைகளில் சமூக இடவெளியை கண்டிப்பாக பின்பற்றி தொற்று பரவலை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தளர்வுடன் கூடிய ஊரடங்குக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago