கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் 150 லிட்டர் சாராயத்தையும், 96 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மணலூர்பேட்டை போலீஸார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, செம்படை கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெரு அருகில் சாராயம் விற்ற சின்னதுரை(55) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். இதேபோல் சின்னசேலத்தை அடுத்த மூங்கில்பாடி கிராமத்தில் காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்ற விஜயலெட்சுமி (33)என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை - சேலம் சாலை மார்க்கத்தில் உள்ள ரவுண்டானாவில் உளுந்தூர்பேட்டை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையோடு சென்ற நபரை மறித்து விசாரித்தனர். அவரிடம் 96 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் இருந்து கடத்தல்
பின்னர் அவரிடம் விசாரித்த போது, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அஜய்(20) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அஜய்யையும் போலீஸார் கைது செய்தனர்.மேலும் புதூர் கிராமத்தில் தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் வரஞ்சரம் போலீஸார் அங்கு சென்றனர்.
அப்போது, சாராயம் விற்ற நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த 25 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago