கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் நீர்வழித்தடங்களில் ரூ.1.60 கோடியில் 60.60 கிலோ மீட்டருக்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள வாய்க் கால்கள் மற்றும் வடிகால் வாரிக ளில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை கரூர் மாவட்டத் துக்கான கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் நேற்று பார்வை யிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் செய்தியா ளர்களிடம் கூறியது: நிகழாண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்னர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள், வடிகால் களை தூர் வாரும் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மூலம் 10 இடங் களில் தூர் வாரும் பணி நடைபெறுகிறது. 10 இடங்களில் இரு பாசன வாய்க்கால்கள் 25.60 கி.மீ அளவுக்கும், 8 வடிகால் வாய்க்கால்கள் 35 கி.மீ அளவுக்கும் என 60.60 கி.மீ தொலைவுக்கு வடிகால் வாய்க்கால்கள் ரூ.1.60 கோடி செலவில் தூர் வாரப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் மே 28-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இதுவரை 30 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஜூன் 12-ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும், இதன் மூலம் 9,704 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றார். பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங் கடேசன், உதவிப்பொறியாளர்கள் தர், கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, நொய்யல், முத்தனூர், நஞ்சைப்புகழூர் ஆகிய இடங்களில் புகழூர் வாய்க்காலிலும், செவ்வந்திப் பாளையம், முனியப்பனூர், நெரூர் ஆகிய இடங்களில் நெரூர் வாய்க்காலிலும், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கோட்டை மேடு, இனுங்கூர் ஆகிய இடங்க ளில் வடிகால் வாரிகளிலும் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் சி.விஜயராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago