மார்க்சிஸ்ட் போராட்டம் :

By செய்திப்பிரிவு

மத்திய அரசு வேளாண் திருத்த சட்டத்தை கொண்டுவந்து ஓராண்டு நிறைவடைவதை அடுத்து, அச்சட்டத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5-ம் தேதி வேளாண் சட்டத்தில் 3 திருத்தங்கள் செய்து, நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்தது. பின்னர் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை கண்டித்து விவசாயி கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் புதிய திருத்த சட்டத்தை நிறைவேற்றி ஓராண்டு ஆகும் நிலையில், அந்த சட்டத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். போலீஸார் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி அளித்தனர்.

திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர் வேளாண் சட்ட நகலை கிழித்து மத்திய அரசுக்கு தங்கள் எதிர் ப்பை தெரிவித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார்.

அவர் கூறும்போது, “வேளாண் மக்களுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றிய இந்த நாளை, விவசாய எதிர்ப்பு தினமாக கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்றார். சிஐடியு செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல தமிழ்நாடு விவசாயி கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத் துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும் படையார் தலைமை வகித்தார்.

தென்காசி மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீடுகளின் முன்பு நின்று, வேளாண் சட்ட நகல்களை எரித்து, மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடைய நல்லூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்பு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்