திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வயதான பெண்களுக்கு உதவிடவும், சுயமாக தொழில் செய்ய வழிவகை செய்யும் வகையில் சிறு தொழில் செய்வோர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ‘திருப்பத்தூர் மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம்’ என்ற அமைப்பு தொடங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இச்சங்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மகளிர் திட்ட அலுவலர் துணை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பொருளாளராகவும் மற்றும் அலுவல் சாரா உறுப் பினர்கள் கொண்ட குழு அமைத்து செயல்பட அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்துக்கு அலுவல் சாரா உறுப்பினர்களாக கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். எனவே, அலுவல் சாரா உறுப்பினர் களாக சேர விருப்பமுள்ளவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமூகப் பணி களில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் ஆர்வமுடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். அதேபோல, குற்றவியல் நடவடிக்கையோ, நீதிமன்ற வழக்கு நிலுவையிலோ இருக்கக்கூடாது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் பின்தங்கியுள்ள மகளிர்களுக்கு உதவிடும் வகை யில் இச்சங்கம் செயல்பட அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர தகுதியுள்ளவர்கள் தங்களது முகவரி, தொலைபேசி எண், கல்வித் தகுதி, பெற்றோர் மற்றும் குடும்ப விவரங் கள், தொழில், கிறிஸ்தவ சமுதாயத் துக்காக தொண்டாற்றிய விவரங்கள் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய சுய விவரத்தை வரும் 30-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள ‘மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லகத்தில் விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago