தி.மலை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி முதல் - கரோனா நிவாரண பொருட்கள் வழங்க வாய்ப்பு : நியாய விலை கடை விற்பனையாளர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் கரோனா நிவாரண பொருட்கள் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படலாம் என பொதுமக்களிடம் நியாய விலை கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 1,627 நியாய விலை கடைகள் மூலம் 7.60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்ட கரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், 2-ம் கட்ட நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, கரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 வகையான நிவாரண பொருட்கள் ஆகியவை ஜுன் 5-ம் தேதி (நேற்று) முதல் வழங் கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படாததால், நியாய விலை கடைகளில் வழக்க மாக வழங்கப்படும் பொருட்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.

இது குறித்து நியாய விலை கடை விற்பனையாளர்களிடம் பொது மக்கள் கேட்டபோது, ‘வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படலாம்’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்