தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் போன்றவைகள் பன்மடங்கு உயர்த்தி உள்ளோம். தொற்று குறைந்தாலும் பொதுமக்கள் தற்போது கடைபிடித்து வரும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசிபோட்டுக்கொள்ள வேண்டும்.பெரும்பாலானோர் முதன் முறையாக மூச்சுத் திணறல் அதிகமான பிறகு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இவர்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவ மனைக்கு வந்தால் உடனடியாக குணப்படுத்த முடியும்.
முதல்வர் நோய் தொற்றி லிருந்து பொதுமக்களை பாதுகாக்க மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க கூறியிருக்கிறார். எதிர் வரும் அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்பதால் , அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளோம்.மருத்துவ வல்லுநர் குழு அமைத்து தடுப்பு நடவடிக் கைகள் எடுத்து வருகிறோம்.
முழு ஊரடங்கு நீடிப்பு குறித்துஉயர்மட்டத்தில் முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் வெளியிடப்படும்.
பொது மக்கள் அதிகமாக கூடுகின்ற இறப்பு நிகழ்வுகளிலும், பிறந்தநாள்,திருமண விழாக்க ளிலும் சென்று வருவோர்களால் நோய்த் தொற்று அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.முழுமையாக இதுபோன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பு ஊசிகளை மத்திய அரசிடம் தர கோரி உள்ளோம். மத்திய அரசு படிப்படியாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு தேவையான மருந்துகளை மத்திய அரசுவழங்கவேண்டும் என முதல்வர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கேட்டுள்ளார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago