செங்கம் அருகே சாலையோரம் இருந்த - கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு : உயிருடன் 4 தொழிலாளர்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

செங்கம் அருகே சாலையோர கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்தார். மேலும், 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு கிராமத்துக்கு செங்கல் ஏற்றி செல்ல டிராக்டர் ஒன்று நேற்று காலை வந்துள்ளது. ஊத்தங்கரை அடுத்த பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் விக்னேஷ்(24), என்பவர் டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். அவருடன், அதே பகுதியில் வசிக்கும் முனிரத்தினம்(23), குப்புசாமி(26), தம்பிதுரை(25), பிரதாப்(22) ஆகியோர் வந்துள்ளனர்.

கட்டமடுவு கிராமத்தில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்தது. சுமார் 20 அடி ஆழம் உள்ள கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்தது. இது குறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் மேல்செங்கம் காவல்துறை மற்றும் செங்கம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட் டனர். அவர்களுடன், இணைந்து கிராம மக்களும் கிணற்றில் விழுந்த வர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண் டிருந்த முனிரத்தினம், குப்புசாமி, தம்பிதுரை மற்றும் பிரதாப் ஆகிய 4 பேரை உயிருடன் மீட்டனர். டிராக்டருக்கு அடியில் விக்னேஷ் சிக்கிக்கொண்டதால் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வர வழைக்கப்பட்டு, கிணற்றில் இருந்த டிராக்டரை வெளியே எடுத்தனர். இதையடுத்து 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு விக்னேஷ் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

இது குறித்து மேல்செங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்