தமிழகத்திலேயே முதன் முறையாக யுனானி முறையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையம் வாணியம்பாடியில் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர், திருப்பத் தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், காலி படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு, சித்த மருத்துவ முறை, கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.
முன்னதாக, மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார மையம், ஆம்பூர் வர்த்தக மையம், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட் டத்தில் கூடுதலாக அமைக்கப் பட்டுள்ள 400 படுக்கை கள் மற்றும் வாணியம்பாடியில் யுனானி முறையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சைமையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "தமிழகத்தில் கரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பும். தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் கரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் விரைவாக ஆய்வு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்.
மாநிலம் முழுவதும் 52 சித்தா சிகிச்சை மையங் கள் கரோனாவுக்காக தொடங்கப் பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலேயே முதல் முறையாக வாணியம்பாடியில் யுனானி முறையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க புதிய சிகிச்சை மையம் இன்று (நேற்று) தொடங்கப் பட்டுள்ளது.
கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago