கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு - விருதுநகரில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வேங்கை, புங்கம், அயன், அரசன், ஆலமரம், இழுப்பை, தன்டிரை, எட்டி, பாதாம் மற்றும் பூவரசு உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இன்றைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்