கரூர் மாவட்டத்தில் 25 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
இனாம்கரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வாங்கப்பாளையம் துணை சுகாதார நிலையம் மற்றும் வெங்கமேடு (கிழக்கு) துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்களை மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் குளித்தலை இரா.மாணிக்கம், அரவக்குறிச்சி பி.ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியது: கரூர் மாவட்டத்துக்கு இதுவரை 98,110 கோவிஷீல்ட், 17,000 கோவாக்சின் என மொத்தம் 1,15,110 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நேற்று(நேற்று முன்தினம்) வரை 1,05,408 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று(நேற்று) 4,750 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,10,158 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், 4,952 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago