திருவண்ணாமலை மாவட்டத்தில் - 70% குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கல் : நாளை முதல் பொருட்கள் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நிவாரணம் பெறுவதற் காக 70 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நிவாரணமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,627 நியாய விலை கடைகள் மூலம் 7,60,743 குடும்ப அட்டைகளுக்கு, முதற்கட்டமாக கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான நிவாரண பொருட்கள் ஆகியவை 5-ம் தேதி (நாளை) முதல் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி, வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் நியாய விலை கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறையினர் கூறும்போது, “திருவண் ணாமலை மாவட்டத்தில் 7.60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான நிவாரண பொருட்கள் வழங்கும் பணி 5-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. ஒவ்வொரு கடையிலும் தினசரி தலா 200 பேருக்கு நிவாரணம் வழங்கப்படும். இதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. மாவட்டத்தில் சுமார் 70 சதவீத குடும்ப அட்டை களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய அட்டைதாரர்களுக்கு 3-வது நாளாக இன்றும் டோக்கன் வழங்கப்பட உள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE