நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்ய 38 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி சார்பில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளுக்கும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுபோல, மளிகை பொருட்களையும் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதன்படி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மளிகை பொருட்களை விற்பனை செய்ய 38 சில்லரை விற்பனை கடைகள் மற்றும் 3 மொத்த விற்பனை கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால், வீடுகளுக்கு நேரடியாக வந்து விநியோகிகம் செய்வார்கள். இப்பணி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago