நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனினும், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை மொத்தம் 262 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனாவுக்கு 262 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், இரு தினங்களுக்கு முன்னர் வரை 180 ஆண்கள், 68 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதில், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் 188 பேரும், இணை நோய் இல்லாதவர்கள் 60 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago