107 சாலை, தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளதால் காஸ் சிலிண்டர் டெலிவரி மேன்கள் பாதிப்பு :

By செய்திப்பிரிவு

கரூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், போலீஸார் வாகன சோதனை நடத்தும் சாலைகளைத் தவிர்த்து, குறுக்குச்சாலைகள் வழியாக பிரதான சாலைகளுக்கு செல்வது, தெருக்களில் வாகனங்களில் சுற்றித்திரிவது போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தடுக்கும் விதமாக, கரூரில் உள்ள பிரதான சாலைகளை இணைக்கும் 11 குறுக்குச்சாலைகள் மற்றும் 96 தெருக்களின் ஒரு பகுதி மூங்கில் தடுப்புக் கழிகள், பேரிகார்டுகள் கொண்டு கடந்த வாரம் அடைக்கப்பட்டன.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி சுற்றித்திரிவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர்களை 3 சக்கர சைக்கிள்களில் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாலை அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு 3 சக்கர சைக்கிள்களில் செல்ல இயலாததால், சாலைகளில் உள்ள பேரிகார்டுகளின் இடைவெளி வழியாக மறுபகுதிக்கு சிலிண்டர்களை உருட்டிவிட்டு, பின்னர் அங்கிருந்து சிலிண்டர்களை சைக்கிளிலோ தோளிலோ சுமந்துசென்று, டெலிவரி செய்துவருகின்றனர்.

இதனால், டெலிவெரி மேன்கள் குறிப்பாக வயதானவர்கள் அதிக சிரமத்தை சந்திக்கின்றனர்.

எனவே, சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் 3 சக்கர சைக்கிள்கள் சென்று வர ஏற்ற வகையில், அவசர வழிகளை ஏற்படுத்தித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஸ் சிலிண்டர் டெலிவரி மேன்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்