புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது: ஊரக வளர்ச்சித் துறையினர், நீர்வளத் துறையினர் தங்களது பகுதியில் உள்ள நீர்நிலைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை பொதுப்பணித் துறையினர் உடனே சீரமைக்க வேண்டும்.மழை அளவு, மழை பாதிப்புகள் போன்ற தகவல்களை தினந்தோறும் காலை 7 மணிக்குள் பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு வட்டாட்சியர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago