கடலூர் மாவட்ட நிர்வாகம் பயன்பெறும் வகையில் என்எல்சி நிறுவனம் 10 ஆம்பு லன்ஸ்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.
கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க உதவிடும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனம் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊர்திகளை வாடகைக்கு அமர்த்தி, அவற்றை நேற்று முன்தினம் நெய்வேலியில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. உயிர்காக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளைக் கொண்ட இந்த ஆம்புலன்ஸ் ஊர்திகள் 3 மாத காலம் மாவட்ட நிர்வாகத்தால் 24 மணி நேரமும் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக வாடகை தொகையாக ரூ.59 லட்சத்து 4 ஆயிரத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்க உள்ளது.
நெய்வேலி என்எல்சி இந்தியாநிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்தஊர்திகளுக்கான சாவிகளை நிறுவனத் தலைவர் ராக்கேஷ்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரனிடம் வழங்கினார்.
பின்னர் இருவரும் கொடிய சைத்து ஊர்திகளை அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் என்எல்சி மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் நாதெள்ள நாக மஹேஸ்வர் ராவ், சுரங்கத்துறை இயக்குநர் பிரபாகர் சௌக்கி, மின்துறை இயக்குநர் ஷாஜி ஜான், நிதித்துறை இயக்குநர் ஜெய்குமார் னிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago