புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 இடங்களில் கோடைகால நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்காகு றிச்சி வடக்கில் நேற்று முன்தினம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து அவர் பேசியது:
மாவட்டத்தில் நிகழாண்டு 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குறுவை சாகுபடி அறுவடைக்காக தற்போது மாவட்டத்தில் 22 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மோகன், கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago