கரோனா தொற்று குறித்து கண்காணிக்க - 100 வீடுகளுக்கு ஒரு பணியாளரை நியமிக்க நடவடிக்கை : மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள் ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மண்டல அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடைபெற் றது.

கூட்டத்தில், மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலை வகித்து பேசியது: கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த 100 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் நியமித்து தினமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அப்போது யாருக்காவது சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அவர் களை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளவும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றே இல்லை என்ற நிலையை உருவாக்க அனைத்து அலுவலர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி அர்ப் பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில், எஸ்.பி சசாங்சாய், எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம், ஆர்.இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் வர் ரா.முத்துச்செல்வன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஞானக் கண் பிரேம்நிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்