மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு இலவசமாக கரோனா சிகிச்சை : தனலட்சுமி சீனிவாசன் பல்கலை. வேந்தர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மண்ணச்சநல்லூர் தொகுதி மக் களுக்கு இலவசமாக கரோனா சிகிச்சை அளிக்கப்படும் என தன லட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தெரிவித்தார்.

சமயபுரத்தில் உள்ள பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று செய் தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், தீவிர நோய் தொற்று சிகிச்சைக்காக 15 படுக் கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 210 படுக்கைகள் பிற நோய்களுக்கான சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 105 கரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவையும், கரோனா சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே தொகுதி மக்கள் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மற்றவர்களுக்கு குறைந்த கட்ட ணத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். இம்மருத்துவமனை யில் இதுவரை 125-க்கும் அதிக மான ஏழை மக்கள் இலவசமாக மருத் துவ சிகிச்சை பெற்று குணமடைந் துள்ளனர் என்றார்.

அப்போது, மருத்துவர்கள் ராஜேஷ், சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.l

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்