திருக்கோவிலூர் அருகே தபோவனம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை அரகண்டநல்லூர் உதவிக் காவல் ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நோக்கி முட்டைகோஸ்ஏற்றி வந்த லாரியை நிறுத்திசோதனை மேற்கொண்டனர். சோதனையில் முட்டைக்கோஸுக்கு இடையில் 81 பெட்டிகளில் 3,888மது பாட்டில்களை கடத்தி வருவதுதெரியவந்தது. போலீஸார் அதனை பறிமுதல் செய்தனர். இதுதொடர் பாக அரகண்டநல்லூர் அருகே தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவி (25), திருநாவலூர் அருகே கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (30) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் லாரியின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல வளத்தி அருகே ஞானோதயம் சோதனை சாவடியில் நேற்று அதிகாலை செஞ்சி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரிக்கு இரும்பு ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 93 மது பாட்டில்களை கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விழுப்புரம் அருகே அன்ராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்( 39) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள், லாரியின் மதிப்பு ரூ. 5 லட்சம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago