பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு :

By செய்திப்பிரிவு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், பெண்களுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர், ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகள் இல்லத்தை நடத்துபர்கள் என 7 பேர் அடங்குவர்.

இக்குழுவினர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுப்பர்.

எனவே, கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி அறிந்தால் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 04286 - 233103, 79047-16516 ஆகி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்