அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்திலுள்ள பொன்னாறு பாசன வாய்க்காலை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கின.
இப்பணிகளை தொடங்கி வைத்து, செயற்பொறியாளர் வி.ஆசைத்தம்பி பேசியது:
மேட்டூர் அணையிலிருந்து திறந் துவிடப்படும் பாசன நீர், கல்லணை மூலம் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு, அதிலிருந்து பொன்னாறு பிரதான வாய்க்கால் மற்றும் 8 கிளை வாய்க்கால்கள் மூலம் 4,694 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மொத்தம் 69.52 கி.மீ நீளமுள்ள இந்த வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களை ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், உதவி செயற் பொறியாளர் வி.சாந்தி, உதவிப் பொறியாளர்கள் ப.மோகன் ராஜ், ரா.தியாகராஜன், அ.ராஜா சிதம்பரம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன், பொன்னாறு பாசன விவசாய சங்கத் தலைவர் சே.ராதாகிருஷ்ணன், குருவாடி ஊராட்சித் தலைவி சுப்புலட்சுமி ரவி, விவசாய சங்கத் தலைவர் க.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago