முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கியிருந்தால் வாணி யம்பாடியில் அதிமுக தோல்வியடைந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் அதிமுக நகர அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தினசரி 500 வரை இருந்தது. தற்போது, 2,500 கடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலையின் போது தினசரி பாதிப்பு 80 வரை இருந்தது. தற்போது, 500-ஐ கடந்துள்ளது. அதிமுக அரசுக்கு பொதுமக்கள் எப்படி ஒத்துழைப்பு அளித்தார்களோ அதேபோல தற்போதும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நானும் 2-தவணை தடுப்பூசி போட்டுள் ளேன். அதனால், என்னால் அனைத்து இடங்களுக்கும் சென்று வர முடிகிறது. அதிமுக அரசு கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர என்னென்ன வழிமுறைகளை கையாண்டதோ அந்த வழிமுறைகளை தற்போதைய அரசும் கையாள வேண்டும்.
முன்னாள் அமைச்சர் நிலோபர்கபீல் கட்சியை விட்டு நீக்கியதற்கு நான் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி தலைமை எடுத்த முடிவுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சர் பதவியை மட்டுமே குறிக்கோளாக கொண்டாரே தவிர கட்சியை மதிக்க வில்லை. தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அவர் முறையாக செய்யவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியை நகர் புறங்களுக்கு மட்டுமே அவர் செலவழித்தார். கிராமப் பகுதி களுக்கு எந்த வசதியும் அவர் செய்து தரவில்லை. குறிப்பாக, அவரது தொகுதிக்கு உட்பட்ட நெக்னா மலைப்பகுதிக்கு சாலை வசதி செய்ய அவர் முன்வர வில்லை. இதனால், அவர் மீது தொகுதி மக்கள் வெறுப்படைந்து விட்டனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்விக்கு மிக முக்கிய காரணம் வாணியம்பாடி தொகுதி. இந்த தொகுதியில் சுமார் 22 ஆயிரம் வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. அமைச்சராக இருந்த நிலோபர்கபீல் தனது தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை முறையாக செய் திருந்தால் எம்பி தேர்தலில் வேலூர் அதிமுக வேட்பாளர் எளிதாக வெற்றிபெற்றிருப்பார்.
இதையெல்லாம் கட்சி தொண்டர்களும், பொது மக்களும் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னிடம் புகாராக தெரிவித்தனர். அதை நான் கட்சி தலைமையிடத்தில் தெரிவித்தேன். மேலும், இந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதி யில் நிலோபர் கபீலுக்கு மீண்டும்போட்டியிட அனுமதி வழங்கியி ருந்தால் வாணியம் பாடியில் அதிமுக தோல்வியடைந்திருக்கும்.புதியவருக்கு வாய்ப்பு அளித்ததால் வாணியம்பாடி தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின் போதே நிலோபர்கபீலை நான் பரிந்துரை செய்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வாணியம்பாடி தொகுதிக்கு வேறு யாரும் இல்லையா? என என்னிடம் கேட்டார். நான் தான் நகராட்சி தலைவராக உள்ளார் என வாய்ப்பு தருமாறு சிபாரிசு செய்தேன். மாவட்டச்செயலாளர் மற்றும் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கட்சி தலைமை என்னிடம் கருத்து கேட்டபோது நான் எனது முடிவை தெரிவித்தேன். அதன்பேரில் கட்சி தலைமை அவருக்கு மீண்டும் போட்டியிட அனுமதி வாய்ப்பு வழங்கவில்லை.
அதனால் தான் அவர் கட்சியை முழுமையாக புறக்கணித்தார். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அவர் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை. தேர்தலுக்குப் பிறகு திருப்பத்தூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து நிலோபர்கபீல் பேசியுள்ளார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு மேல் அவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும். எனவே, அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
எனது தொகுதியான ஜோலார் பேட்டை தொகுதிக்கு ரூ.184 கோடிமதிப்பில் அனைத்து குக்கிராமங் களுக்கும் காவிரி குடிநீர் திட்டம்விரிவுப்படுத்தினேன். இப்படி பல்வேறு திட்டங்களை செய்த என்னையே மக்கள் புறக்கணித்த போது, நிலோபர்கபீல் போன்றவர் களை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago