திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நகர் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டிடத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் நகர் மன்னார்குடி கிராமபகுதியில் கரோனா நோய்த்தொற்று கள ஆய்வு பணி மேற்கொண்டு வருவதை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்றுமுன்தினம் ஆய்வு மேற் கொண்டார்.
இந்த ஆய்வுக்குப் பின் ஆட்சியர் கூறியது:
கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறியும் கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு போதிய வசதிகளை அரசு அலுவலர்கள் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள ஆய்வு பணியின்போது பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி கொண்டு ஆக்சிஜன் பரிசோத னையும் மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் முகாம்கள்கிராமப்புறங்களில் நடைபெறும்போது முன்கூட்டியே தடுப்பூசி போடுவதற்கான இடம் நாள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் அறியும் வண்ணம் தண்டோரா மூலம் தெரிவிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் கரோனா நோய் தொற்று தொடர்பாக ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக வட்டார மருத்துவமனை மற்றும் கிராம ஊராட்சிகளை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago