கரூர் மாவட்டத்தில் - கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருத்துவ மனைக்கு சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக இரு வாரங்களுக்கு முன் 10,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்தன. மே 24-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 7 அரசு மருத்து வமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த 3 நாட்களில் மட்டும் 16,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தடுப்பூசிகள் இருப்பு குறைந்த தால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு முகாமில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை மற்றும் சிந்தல வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட வர்களுக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

இங்கு தடுப்பூசி போட வந்த வர்கள் ஏமாற்றமடைந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாள் என்பதால் மாவட் டத்தில் எங்கும் தடுப்பூசி போடப் படவில்லை.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியது, கரூர் மாவட்டத்துக்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும் போடப்பட்டுவிட்டன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் மட்டும் தடுப்பூ சிகள் உள்ளன. தடுப்பூசி எப்போ தும் வரும், எத்தனை தடுப்பூசிகள் வரும் என்ற விவரம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE