கரோனா பரவலை தடுக்க வும், நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி என்ஜிஓ காலனி சொசைட்டி திருமண மண்டபத்தில் பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம், ஜவகர் நகர் தொழில் மற்றும் வர்த்தகர் நலச் சங்கம், அனைத்து நலச் சங்கங்கள் சார்பில் 5-வது முறையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட சுமார் 300 பேருக்கு பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலி யர்கள் தடுப்பூசி செலுத்தினர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முகாம்களில் பங்கேற்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் சங்கரன், ஜவகர் நகர் தொழில் மற்றும் வர்த்தகர் நலச் சங்க தலைவர் முருகன், செயலாளர் ஜுப்லி ராஜா, நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லபெருமாள் கலந்து கொண்டனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி
தென்காசி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கிராமப்புறங்களில் 143 முகாம்கள், நகர்ப்புறங்களில் 121 முகாம்கள் நடத்தப்பட்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago