தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு - மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு : தென்காசி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

தன்னார்வ தொண்டு நிறுவனங் களுக்கு மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள், சிகிச்சைப் பொருட்கள், தன்னார்வலர்கள், வாகன ஆதரவு, ரத்த தானம், உணவு பொருட்கள், தானியங்கள், தொலைபேசி ஆலோசனை மற்றும் கரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றலாம்.

இதற்கு, https://ucc.uhcitp.in/ngoregistratio என்ற இணைப்பில் பதிவு செய்து மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு msktk21 @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது கட்டுப்பாட்டு அறையை 9048254270 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்