திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலை கிராமத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. நகர் புறங்களைக் காட்டிலும் கிராமப்பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும் கரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. தொழில், வியாபாரம் நிமித்தமாக அடிக்கடி நகர் புறங் களுக்கு வந்த கிராமமக்கள் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் தற்போது கிராமப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று கரோனா பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என்ற வீதத்தில் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது கிராமப்பகுதிகளில் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. வீடு, வீடாக செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பு உள்ளவர்கள் யார்? 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விவரம்? நகர் புறங்களுக்கு அடிக்கடி வந்து செல்வோர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக மலை கிராமங்களிலேயே சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் சிவன் அருள் கூறியதை தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர் நாட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கர்க் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தங்கய்யாபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில் வரவேற்றார். திருவண் ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதூர்நாடு கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் அடுத்த அங்கநாதவலசை மற்றும் மேற்கத்தியனூர் கிராமங் களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தனர்.
அப்போது, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன் களப் பணியாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் வழங்கி, பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago