கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 106 கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 28-ம் தேதி வரை 3,49,560நபர்களின் மாதிரிகள் கரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,173. இவற்றில் 15,974 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, தற்போது 4,070 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றினால் இதுவரை 129 நபர்கள் இறந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள கரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 106. இதில் கிராமப்புறங்களில் 70 பகுதிகளும், நகர்ப்புறங்களில் 36 பகுதிகளும் உள்ளன.
மாவட்டத்தில் சின்னசேலம், மேலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருநாவலூர், தியாகதுருகம், திருக்கோவிலூர், கல்வரா யன்மலை உள்ளிட்ட ஊராட்சிக ளில் 1,199 வசிப்பிடங்களில் பரிசோதனை மேற்கொண்டதில் 593 வசிப்பிடங்களில் கரோனாதொற்றுக் கண்டயறிப் பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஜனவரி 16 -ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை 73,028 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங் களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களும் தாமாக ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கடந்த 4 நாட்களாக 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களில் 14,932 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காக்கும் கவசமாக தடுப்பூசி உள்ளது. எனவே, தகுதிவாய்ந்த அனைவரும்கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago