மரக்காணம் வட்டாரத்தில் - நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.5. 63 கோடி ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

மரக்காணம் வட்டாரத்தில் சுமார் 6,500 ஹெக்டர் பரப்பில் இறவை பயிர்களும் 12,500 ஹெக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இறவை பயிர்களில் மகசூலை அதிகரிக்க, மானாவாரி நிலங்களை இறவைக்கு கொண்டு வரும் வகையில் பயிரிடும் கரும்பு,மக்காசோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனமும், மணிலா உளுந்து போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனத்திற்கு மழைதூவுவான் உள்ளிட்ட கருவிகளை அமைத்திடசிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் புதிதாக மின் இணைப்பு பெற்று நுண்ணீர் பாசனம் பெறும் விவசாயிகளுக்கு மின் மோட்டார், பிவிசி பைப்புகள், தரை நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்திட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மரக்காணம் வட்டாரத் திற்கு ரூ.5. 63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தில் பயன் பெற ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரை படம், சிறு,குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மண், நீர் மாதிரிகள் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்