கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் ஒருங்கிணைந்த கட்டளை அறையை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி வீட்டு தனிமைப்படுத்துதல் பற்றிய விவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் அருகில் உள்ள கரோனா கவனிப்பு மையங்கள் விவரம், படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த கட்டளை அறையை 1077 மற்றும் 04286- 281377, 299137, 299139, 82204 02437, 93423 12761, 93423 12596 ஆகிய தொலைபேசி மற்றும் அலைபேசிஎண்களை தொடர்புகொண்டு விவரங்களை அறிந்து கொள்ள லாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago