பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களுக்கு எடைகுறைவாக உணவுப் பொருட்களை வழங்கும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் சார்பில் ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:
கரோனா பேரிடர் காலத்திலும், சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு, உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் நெய்குப்பை ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் உணவு பொருட்கள் வழங்க வந்த நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் ஒருவர், உணவு பொருட்களை எடை குறைவாக வழங்கிவிட்டு, சமையல் உதவியாளரை வற்புறுத்தி கூடுதல் அளவில் இறக்கியதாக கையொப்பம் வாங்கியுள்ளார். மேலும், உணவு பொருட்கள் வழங்கும்போது அமைப்பாளர்களை வற்புறுத்தி குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் இதேபோன்ற நிலைமையே உள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கருப்புக்கொடி ஏந்தி அரிசி, பருப்பு உள்ளிட்ட சத்துணவு பொருட்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago